சென்னை, வீட்டு வசதிகள் குறித்த சுய கணக்கெடுப்பை 'ஆன்லைன்' மூலம் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு:- 1. न '' (एक சென்று, மாநிலம் என்ற இடத்தில் தமிழ்நாட்டை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், 'கேப்ட்சா' குறியீட்டை பதிவு செய்ய வேண்டும். 2. செல்போன் எண்ணை குறிப்பிட வேண்டும். தேவைப்பட்டால் இணையதள முகவரியையும் குறிப்பிடலாம். 3. பதிவு செய்யும் வசதி 16 மொழிகளில் இடம் பெற்றிருக்கும். இதில் தங்களுக்கு தெரிந்த மொழிகளை தேர்வு செய்தால், பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு 'ஓ.டி.பி.' எண் வரும். அதன் மூலம் சுய கணக்கெடுப்பு பணியை தொடரலாம். 4. எந்த மாவட்டம், கிராமம்/ நகரம்/ பின்கோடு எண்ணை தெரிவிக்க வேண்டும். 5. இந்த விவரங்களை பதிவு செய்தவுடன் கூகுள் வரைப்படம் (மேப்) மூலம் தங்களுடைய வீடு அமைந்துள்ள இடம் உறுதி செய்யப்படும். 6. வீட்டு வசதிகள் குறித்த 33 கேள்விகள் வரிசையாக வரும். இந்த கேள்விகளை நிரப்புவதில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் கேள்விகளை கேட்டு விளக்கங்கள் பெற முடியும். அதன் பின்னர் உரிய பதில்களை அளிக்கலாம். 7. தாங்கள் அளித்த பதில்கள் சரியாக இருக்கிறதா? என்பதை பார்வையிட்டு உறுதி செய்யலாம். 8. இறுதியாக விவரங்களை சமர்பித்தவுடன் அவை சர்வரில் பதிவாகிவிடும். இதனை உறுதி செய்யும் வகையில் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு 11 இலக்க எண் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். 9. வீடுகளுக்கு நேரடியாக கணக்கெடுக்க வரும் பணியாளர்களிடம் இந்த எண்ணை காண்பிக்க வேண்டும். அவர்கள் இந்த எண் மூலம் தாங்கள் பதிவு செய்த விவரங்கள் சரியாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்த பின்னர், கணக்கெடுப்பை உறுதி செய்வார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/how-to-register-for-self-assessment-online-find-out




