ராமநாதபுரம், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் அவரது நினைவை போற்றி வருகின்றனர். இந்த நிலையில், இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அமைச்சர்களான நிர்மல் குமார், அருண்ராஜ், பிரபு, மதன் ராஜா, ராஜீவ், விக்னேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் மரியாதை செலுத்தினர். முதலில், இம்மானுவேல் சேகரனாரின் புதிய மணி மண்டபத்தில் மாலை அணிவித்தும், அதன் பின்னர் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து, திமுக மற்றும் அதிமுக கட்சியினர் சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்த உள்ளனர். முக்கிய அரசியல் தலைவர்கள் வருவதால், பரமக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/immanuel-sekaranar-memorial-day-tribute-by-the-government-of-tamil-nadu




