ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்டோர் நடிக்கும் ‘சூர்யா 47’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, பிரபல மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'சூர்யா 47' என அழைக்கப்படும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் மலையாள நடிகர் நஸ்லேன் மற்றும் நடிகை நஸ்ரியா நசீம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். போலீஸ் அதிகாரியாக சூர்யா? 'ஆவேஷம்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இந்த படத்தில் சூர்யா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையில், படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதிக்கட்டத்தை எட்டிய படப்பிடிப்பு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘ழகரம் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ‘சூர்யா 47’ படத்தின் அப்டேட் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்டோர் நடிக்கும் ‘சூர்யா 47’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/director-jithu-madhavan-and-suriyas-suriya-47-film-update-will-be-released-tomorrow




