பண்ருட்டி, சென்னை எழும்பூரில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. ரெயில் ஒன்று நேற்று இரவு 8 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு வழக்கமான நடைமுறைப்படி ரெயிலின் என்ஜின் மாற்றப்பட்டது. என்ஜின் மாற்றும் பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர், இரவு 8.40 மணிக்கு அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கியது. நடுவழியில் பழுது ரெயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விழுப்புரத்தை அடுத்த சேந்தனூர் ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, ரெயிலின் என்ஜினில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சேந்தனூர் ரெயில் நிலையத்திலேயே எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அவதி எஞ்சின் கோளாறால் ரெயில் பாதி வழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். தகவலறிந்த ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக விழுப்புரத்தில் இருந்து மாற்று எஞ்சினை அனுப்பி வைத்தனர். சுமார் 2 மணி நேர கால தாமதத்திற்கு பிறகு மாற்று எஞ்சின் வந்ததை தொடர்ந்து, இரவு II மணிக்கு சேந்தனூரில் இருந்து ரெயில் மீண்டும் புறப்பட்டு ராமேஸ்வரம் நோக்கி சென்றது. எஞ்சின் கோளாறு காரணமாக ரெயில் தாமதமானதால் ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள மற்ற ரெயில்களின் நேரமும் பாதிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-failure-chennai-rameswaram-express-delayed-by-two-hours




