சென்னை, 'டோரதி' படம் தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. பாலின ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்கும் ஆயுதமாய், அழகாய், ஆங்காரமாய் நம்முன் நிமிர்ந்து நிற்கிறாள் இந்த டோரதி. பேசா பொருளை பேசத் துணிந்து, அதை இவ்வளவு அற்புதமாய் செய்திருக்கும் தோழன் கார்த்திக் சுப்புராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும். என இயக்குநர் ராஜு முருகன் பதிவிட்டுள்ளார். ‘டோரதி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1990-களின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள ‘டோரதி’, சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது. திரைப்பிரபலங்கள் பாராட்டு வெளியானது முதலே ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷின் நடிப்பும் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். நடிகர் தனுஷ், நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் மணிரத்னம், இயக்கநர் தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்டோரும் ‘டோரதி’ படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கவனமும் மேலும் அதிகரித்துள்ளது. ‘மாஸ்டர் பீஸ்களில் ஒன்று’ இந்த நிலையில், குக்கூ, ஜோக்கர், ஜிப்சி, மெஹந்தி சர்க்கஸ் போன்ற படங்களை இயக்கி கவனத்தை பெற்ற இயக்குநர் ராஜு முருகன் ‘டோரதி’ படத்தை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், 'டோரதி' தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. பாலின ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்கும் ஆயுதமாய், அழகாய், ஆங்காரமாய் நம்முன் நிமிர்ந்து நிற்கிறாள் இந்த டோரதி. பேசா பொருளை பேசத் துணிந்து, அதை இவ்வளவு அற்புதமாய் செய்திருக்கும் தோழன் கார்த்திக் சுப்புராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நன்றி கார்த்தி. மிகச்சிறந்த பங்களிப்பை அளித்திருக்கும் சனந்த், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட அத்தனை நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் திரு உள்ளிட்ட மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். கடும் நெடும் பயணங்களில் தீரவே தீராத காதலாய் உடன் வரும் ராஜா சாருக்கு நன்றியை தவிர வேறென்ன சொல்லமுடியும். என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dorothy-is-a-masterpiece-of-tamil-cinema-director-raju-murugans-heartfelt-post



