கார்டிப், ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகள், பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லும் பிரகடனம் இன்று வெளியாக உள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் தனித்தனி நாடுகளாக செயல்பட்டு வந்தாலும் அவை பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் வருகின்றன. பிரிட்டனின் கீழ் இருந்து விலக வேண்டும் என்று இந்த நாடுகளில் பிரிவினை குரல்கள் பல காலமாக உள்ளன. இந்த மூன்று நாடுகளிலும் நடந்த தேர்தல்களில் பிரிவினை கொள்கையை ஆதரிக்கும் கட்சிகள் வெற்றி பெற்று தற்போது ஆட்சியில் உள்ளன. வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. வேல்சில் பிளெய்ட் சிம்ரு கட்சியும், ஸ்காட்லாந்தில் எஸ்.என்.பி. கட்சியும், வடக்கு அயர்லாந்தில் சின் பெயின் கட்சியும் செல்வாக்குடன் ஆள்கிறது. கூட்டு பிரகடனம் இந்நிலையில் வேல்ஸ் தலைநகர் கார்டிப் நகரில் இன்று நடக்கும் கூட்டத்தில், மூன்று நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அப்போது, பிரிட்டனில் இருந்து பிரிவது குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தும் உரிமையை கோரும் கூட்டு பிரகடனத்தில், அவர்கள் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது. சுதந்திரத்திற்கு பிறகு ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் தனிநாடுகளாகவும், வட அயர்லாந்து அயர்லாந்துடன் இணைவது ஆகியவை அவர்களின் கோரிக்கைகளாக உள்ளன. பிரிட்டன் பிரதமர் சொல்வது என்ன? பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், நாடாளுமன்றத்தில் பேசியபோது, ஸ்காட்லாந்திற்கான மற்றொரு பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவாக மக்களிடையே தெளிவான ஒருமித்த கருத்து நிலவினால், அதற்கு ஒப்புதல் அளிப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து 3 நாடுகளின் தலைவர்களின் சந்திப்பு இன்று நடைபெறுகிறது. அயர்லாந்து ஒன்றிணைவதைக் காண விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார். அதாவது கடந்த சனிக்கிழமையன்று டப்ளினுக்கு சென்றிருந்த டிரம்ப், வடக்கு அயர்லாந்து, அயர்லாந்து குடியரசுடன் இணைவது மிகச் சிறந்த விஷயமாக இருக்கும் என்று கூறியதுடன், ‘இதில் என்ன தவறு இருக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/scottish-welsh-and-northern-irish-leaders-meet-to-plan-break-up-of-uk




