புதுடெல்லி, விமானப் பயணத்தின்போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை ‘எக்ஸ்’ (X) பயனர் ஒருவர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. வீடியோ கால் அந்த பயனர் தனது பதிவில், விமானத்தில் தனக்கு அருகில் சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், வீடியோ கால் மூலம் தனது குடும்பத்தினருக்கு விமானத்தின் சன்னல் வழியே தெரிந்த அழகிய காட்சிகளை காண்பித்ததாக தெரிவித்துள்ளார். வீடியோ கால் மூலம் விமானத்திற்கு வெளியே தெரிந்த காட்சிகளைப் பார்த்த அந்த பயணியின் குடும்பத்தினர், “நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலி” என்று மிகுந்த உற்சாகத்துடன் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். சாதாரணமான விஷயம். மேலும், “சில சமயங்களில், நமக்கு மிகவும் சாதாரணமாக தோன்றும் விஷயங்கள், வேறொருவருக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிக்கும் தருணமாக இருக்கக்கூடும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று, வாழ்க்கையில் சிறிய விஷயங்களின் மதிப்பை நினைவூட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/woman-moved-by-passenger-sharing-flight-window-view-with-family-on-video-call




