டுப்லின், அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 241 ரன்கள் பிரெடியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஏமி ஹண்டர் அதிகபட்சமாக 67 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் டீஅன்ட்ரா டாட்டின், ஹெய்லி மேத்யூஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 242 ரன்கள் இலக்கு 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் அபாரமாக விளையாடி 94 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 100 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஸ்டெபானி டெய்லர் 105 பந்துகளில் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் அடித்து 100 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். ஷெமைன் கேம்பெல்லே 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/mathews-taylor-hit-centuries-as-west-indies-women-beat-ireland-to-win-odi-series




