சென்னை, சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:- விஜய் அவர்களே. திருவொற்றியூர் கூட்டம் வாயிலாக உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இப்பத்தான் உங்களுக்கு கேடு காலம் ஆரம்பித்துள்ளது. இப்படித்தான் 1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது டான்சி நில விவகாரம் பிரச்சனையானது. ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில் முதல்-அமைச்சர் விஜய் டெண்டரில் ஊழல் செய்துள்ளார். அதேபோல 1991-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில் டான்சி நிலம் வாங்கப்பட்டது. நான் தான் முதல்முதலாக அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த ஆவணங்களை எல்லாம் பார்த்து தப்பு என்று நான் தான் கூறினேன். அந்தம்மா வேறு ஏதும் உலகமகா தப்பு செய்யவில்லை. அந்தம்மாவே நிலம் வாங்கியதை ஒப்புக் கொண்டார். இன்றைக்கு முதல்-அமைச்சர் விஜய்க்கு இருக்கும் திமிரை போலத்தான் அன்றைக்கு ஆட்சிக்கு வந்த முதல்முறை ஜெயலலிதாவுக்கும் திமிர் இருந்தது. காரணம் எதிர்க்கட்சியில் யாரும் இல்லை. ஒரே ஒரு கலைஞர் மட்டும் தான் வெற்றி பெற்றார். டான்சி நிலம் வாங்கினேன். அதில் என்ன தவறு என கேட்டார். அவராக வாய் விட்டு சிக்கி கொண்டார். அதுதான் கடைசிவரை அந்த அம்மாவை சிறைக்கு கொண்டு சென்றது. இந்த ஆட்சியிலும் முதல் வழக்கே அப்படித்தான் ஆரம்பித்துள்ளது. இப்போதே சொல்கிறேன், சென்டிமென்டலாக முதன்முதலாக இவரும் அந்த இடத்தில் இருந்து தான் ஆரம்பித்துள்ளார். கடைசியாக ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார். ஆர்.எஸ். பாரதியின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/jayalalithaa-possessed-the-same-arrogance-that-vijay-has-what-happened-in-the-end-rs-bharathis-controversial-remarks




