ஷென்சென், சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர். இறுதிப்போட்டி சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதன்படி, இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி சீனாவின் ஹி ஜி டிங்-ரென் ஸியாங் யு ஜோடியை எதிர்கொண்டது. சாத்விக்-சிராக் சாம்பியன் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இப்போட்டியில்11-21, 21-13, 21-17 என்ற செட் கணக்கில் சீன ஜோடியை வீழ்த்தி இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முன்பு 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் சீன மாஸ்டர்ஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சாத்விக்-சிராக் ஜோடி தோல்வியை சந்தித்தது. ஆனால், தற்போது முதல் முறையாக சாத்விக்-சிராக் ஜோடி சீன மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/othersports/china-masters-indias-satwik-chirag-champions




