சென்னை, வார தொடக்கமான இன்று, தங்கம் விலை அதிகரித்துள்ளது. தங்கம் விலை தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,135-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிறு விடுமுறை தினமான நேற்று தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனையானது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில் வார தொடக்கமான இன்று, தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,150-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-slightly-what-is-the-situation-today




