நியூஜெர்சி, அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் நார்வே அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட், லியோனல் மெஸ்சி மற்றும் கிலியன் எம்பாப்பேவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 7-வது கோல் உலகக்கோப்பை தொடரின் 3-வது சுற்று ஆட்டத்தில் இன்று அதிகாலை பிரேசில் மற்றும் நார்வே அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நார்வே 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் நார்வே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய ஹாலண்ட், இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் அவரது மொத்த கோல்கள் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்தது. கோல்டன் பூட் இதனால், கோல்டன் பூட் விருதுக்கான அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 7 கோல்களுடன் லியோனல் மெஸ்சி, கிலியன் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். பிபா உலகக்கோப்பை 2026 - கோல்டன் பூட் பட்டியல்: எர்லிங் ஹாலண்ட் (நார்வே) - 7 கோல்கள் லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா) - 7 கோல்கள் கிலியன் எம்பாப்பே (பிரான்ஸ்) - 7 கோல்கள் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/football/haaland-is-sensational-the-norwegian-star-shares-the-top-spot-in-the-golden-boot-race-with-messi-and-mbappé




