சோலார், ஈரோடு திண்டலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். மர்மநபர் ஈரோடு திண்டல் சிவன் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 62). இவர் கூட்டுறவு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி காந்திமதி (56). இந்த நிலையில் சண்முகசுந்தரம் நேற்று காலை நாராயணவலசுக்கு சொந்த வேலையாக சென்று விட்டார். வீட்டில் காந்திமதி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதை அறிந்து கொண்ட மர்மநபர் ஒருவர் காலை 11.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்தார். பின்னர் சண்முகசுந்தரத்தின் வீட்டு கதவை தட்டியுள்ளார். இதையடுத்து காந்திமதி கதவை திறந்துள்ளார். 10 பவுன் சங்கிலி இதைத்தொடர்ந்து காந்திமதியிடம் அந்த நபர், தான் வங்கி வசூலுக்கு வந்திருப்பதாகவும், இது சண்முகசுந்தரம் வீடு தானே என கேட்டுள்ளார். இதை நம்பிய காந்திமதி அவரை உள்ளே வர அனுமதித்துள்ளார். அப்போது அந்த நபர் காந்திமதியின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை கழற்றி கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். ஆனால் அதற்கு காந்திமதி மறுப்பு தெரிவிக்கவே அவரது கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை மர்மநபர் வெடுக்கென பறித்தார். இதனால் அச்சத்தில் காந்திமதி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவருவதற்குள் மர்மநபர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கார் டிரைவர் அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தமிழரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது காந்திமதியின் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றவர் ஈரோடு வில்லரசம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு தாலுக்கா போலீசார் விரைந்து சென்று சிவக்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சிவக்குமார் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காந்திமதியின் வீட்டுக்கு அவ்வப்போது கார் டிரைவராக வேலைக்கு வந்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து தப்பிக்க காந்திமதியிடம் நகையை பறித்தாக அவர் தெரிவித்தார். இதையடுத்து சிவக்குமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 10 பவுன் சங்கிலியை மீட்டனர். நகை பறிப்பு சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் போலீசார் குற்றவாளியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/snatching-of-10-sovere-gold-jewellery-driver-targets-woman-alone-at-home




