'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. போலீசார் தடியடி நடத்தியபிறகும் போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்த ரில் கூட்டம் குறையவில்லை. பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 25 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து மேதாந்தா மருத்துவம னைக்கு மாற்றப்பட்ட நிலையிலும் அவர் போராட்டத்தை தொடர்ந்து வரு கிறார். வாங்சுக்கிற்கு கடிதம் இந்நிலையில், வாங்சுக்கிற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், "உங்களின் தியாகம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. போராட்டத்தை விட உங்கள் உடல்நலன்தான் எங்களுக்கு முக்கியம். எனவே உண்ணா விரதத்தை கைவிட வேண்டும்" என்று அக்கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து அக்கட்சியின் நிறுவன தலைவர் அபிஜித் தீப்கே தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும். இந்த நாட்டிற்கு அவர் தேவை. அவரது உயிர் மிகவும் மதிப்புமிக்கது. ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் தொடரும்" என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மவுனம் ஏன்? அபிஜித் தீப்கே தனது மற்றொரு பதிவில், "வாங்சுக்கின் உண்ணாவிரதம் 25-வது நாளை எட்டியுள்ள நிலையிலும் பிரதமர் நரேந்திர மோடி இன் னும் மவுனம் கலைக்காதது ஏன்? அரசியல் என்பது தேர்தல் பேரணி களை நடத்துவதும், தேர்தலில் வெற்றி பெறுவதும் மட்டுமே அல்ல. மக்க ளுக்கு பதில் சொல்லும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது. போராட் டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் எதற்காக இவ்வளவு கொடூர மாக நடந்து கொண்டனர்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையே நேற்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- சுதாரித்துக்கொள்ள வேண்டும் இது இந்தியாவின் சுதந்திரத்துக்கு பிந்தைய வரலாற்றில் மிகப்பெரிய இயக்கம். இதை நாங்கள் மிகத் தெளிவாக தெரிவித்துள்ளோம். கடந்த 20-ந் தேதி நடந்த போராட்டம் ஒரு முன்னோட்டம் மட்டுமே. அரசு எங் கள் கோரிக்கைக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இன்னும் லட்சக்க ணக்கானோர் டெல்லிக்கு வருவார்கள், அப்போது நாங்கள் பின்வாங்கி அமைதியாக இருக்க மாட்டோம். அரசு உண்மையிலேயே சுதாரித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்த நாட்டின் இளைஞர்கள் அவர் களை மிக மோசமாக வீழ்த்திவிடுவார்கள்.எங்கள் போராட்டத்துக்கு சிறைவாசம் என்பது ஒரு சிறிய விலையே. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/protest-on-the-20th-is-merely-a-prelude-cockroach-janata-warns-the-central-government




