தென்காசி, தோரண மலையில் 2000 விதைப்பந்துகள் விதைக்கும் விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் இயற்கை எழில் சிறந்த பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள குன்றின் மீது குமரன் அமர்ந்திருக்கும் இயற்கையான குகைக்கோயில் ஆகும் இது இக்கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பழமையும் பெருமையும் உடையதாகும். லட்சம் மரக்கன்றுகள் இயற்கையை பேணும் வண்ணம் இக்கோவிலில் 27 நட்சத்திரங்களுக்கான மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் மேலும் கிரிவல பாதை முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வைப்பதென முடிவு செய்யப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டு வருகிறது. 2000 விதைப்பந்து இந்நிலையில் தோரணமலை கோயில் நிர்வாகம் மற்றும் மழை நண்பர் குழு மற்றும் குற்றாலம் சாதனா ரோட்டரி கிளப் ஆகியோருடன் கலந்து கொண்டு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னி மாணவர்கள் கலந்து கொண்டு தோரணமலை சுற்றிலும் 2000 விதைப்பந்துகளை வீசும் விழா என்று நடைபெற்றது. நிகழ்ச்சி விழாவில் மழை நண்பர்கள் குழு நிறுவன தலைவர் சுந்தர மகேஷ் மற்றும் தலைவர் கிருஷ்ணவேணி பொருளாளர் அன்சாரி.மற்றும் குற்றாலம் சாதனா ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டு விதை பந்துகளை வீசினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்து இருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/event-to-sow-2000-seed-balls-at-thorana-malai




