சென்னை, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒரே நாளில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் 142-வது கூட்டம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 57-வது கூட்டம் ஆகியவற்றில், இன்று காலை 8 மணி முதல் அடுத்த 15 நாட்களுக்கு, வினாடிக்கு 6000 கன அடி வீதம் 7.776 டிஎம்சி தண்ணீரை கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டுமென பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை வரவேற்று மகிழ்கிறேன். குறுவை சாகுபடி கடந்த ஜூலை மாதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடக காங்கிரஸ் அரசு குறித்த நேரத்திற்கு முறையாக அமல்படுத்தாததால், தமிழகத்தின் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் நலிவடைந்தது. மேட்டூர் அணை நீர் கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த அலட்சிய போக்கால், டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதமே திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை நீர், இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் தான் திறக்கப்பட்டது. இதனால் குறுவை மற்றும் இதர சாகுபடி பயிர்கள் காய்ந்து போகும் தருவாயில் உள்ளன. வாழ்வாதாரமே முக்கியம் எனவே, தமிழக விவசாயிகளுக்கும், விளைப் பயிர்களுக்கும் புத்துணர்வு அளிக்கும் வகையிலான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின்தற்போதைய உத்தரவையாவது கர்நாடக காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தாமல் அமல்படுத்துவதை, முதல்-அமைச்சர் விஜய் உறுதி செய்ய வேண்டும்! கர்நாடக காங்கிரஸ் அரசால் தமிழக விவசாயிகள் மீண்டுமொரு முறை வஞ்சிக்கப்படுவதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வேடிக்கை பார்க்க கூடாது! கூட்டணி பாசத்தை விட, விவசாயிகளின் வாழ்வாதாரமே முக்கியம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-must-implement-cauvery-water-management-authority-order-immediately-nainar-nagendran




