சென்னை, சென்னையில் வண்டலூா் பூங்காவில் உள்ள புதுப்பிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று முதல் பார்வையாளர்களுக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. ஜெயலலிதா சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஓட்டேரி எரிக்கு அருகே 2.7 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று முதல் பார்வையாளர்களுக்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா, நீண்ட நாட்களாக புனரமைக்கப்பட்டு வந்தது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பார்வையாளர்களை கவரும் வகையில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது. புதிய மேற்கூரை பூங்காவின் மையப்பகுதியில் உள்ள உட்புற அரங்கம் கம்பளிப்பூச்சி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதி முழுவதும் புதிய பாலிகார்பனேட் தாள்கள் மூலம் புதுப்பிக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலைகள் பார்வையாளர்கள் வண்ணத்துப்பூச்சிகளை மிக அருகில் பாதுகாப்பாக ரசிக்கும் வகையில், துருப்பிடிக்காத இரும்பு வலைகள் மற்றும் புதிய மூங்கில் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் தங்களின் சொந்த ‘மெய்நிகர்’வண்ணத்துப்பூச்சிகளை டிஜிட்டல் திரையில் வடிவமைக்கும் புதிய தொழில்நுட்ப வசதி இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை தோறும் சிறப்பு நிகழ்ச்சி வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்க 200-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் நடப்பட்டு, பூங்காவின் நீரூற்றுகளும் சீரமைக்கப்பட்டுள்ளன.பூங்கா நிர்வாகத்தின் புதிய முயற்சியாக, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11:30 மணிக்கு வண்ணத்துப்பூச்சிகளை பறக்கவிடும் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. சுற்றுலா பயணிகள் இதில் பொதுமக்களும் நேரடியாக பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் வண்டலூர் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா ஒரு புதிய மற்றும் சிறந்த அனுபவமாக இருக்கும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/opening-of-renovated-vandalur-butterfly-park-in-chennai




