சென்னை, மாவீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளில், தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரை அர்ப்பணித்த அவரது வீரத்தையும், அசைக்க முடியாத மனஉறுதியையும் மரியாதையுடன் நினைவுகூர்கிறோம். காலம் கடந்தாலும் அவரது தியாகமும், விடுதலை உணர்வும் தலைமுறைகளுக்கு என்றென்றும் ஊக்கமாக நிற்கும். தமிழர் வீர வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மாவீரர் அழகு முத்துக்கோனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும். அவரது உயரிய இலட்சியங்களும் தன்னலமற்ற தியாகமும் நம் சமூகத்திற்கு வழிகாட்டும் ஒளியாக விளங்கட்டும்.” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/may-the-fame-of-the-great-warrior-azhagu-muthukoon-endure-forever-nainar-nagendrans-post




