ஈரான் போரின் முதல் நாளே ஈரானின் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதன் பிறகு, ஈரானின் தலைமை ஆட்டம் காணும் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் கணக்குப்போட்டன. ஆனால், ஈரானின் தலைமை அயோதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனியை அடுத்த உச்சத் தலைவராகக் கொண்டு வந்தது. இந்த அறிவிப்பிற்குப் பிறகு, மொஜ்தபா காமேனி எங்கேயும் வெளியில் வரவில்லை. மொஜ்தபா காமேனி ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே அமெரிக்க கப்பல்கள் கடந்து செல்ல தடை? ஈரான் `புது' பிளான்! அறிக்கைகள் மட்டுமே அவரது தந்தை இறந்த அதே தாக்குதலில், இவருக்கும் காயங்கள் ஏற்பட்டன. அதற்கு மொஜ்தபா சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது. மேலும், மொஜ்தபாவின் உயிருக்கு அமெரிக்கா, இஸ்ரேலால் ஆபத்து என்றும் கூறப்பட்டது. இதனால், தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கூட மொஜ்தபா கலந்துகொள்ளவில்லை. அவரிடம் இருந்து அறிக்கைகள் மட்டுமே வெளியாகிக் கொண்டிருந்தன. மசூத் பெசெஷ்கியன் சந்தித்த. சமீபத்தில், ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியன் மொஜ்தபாவைச் சந்திக்கக் கடத்தி செல்லப்பட்டதாகவும், அங்கே அவர் பார்த்த நபர் மொஜ்தபா இல்லை என்று சந்தேகப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு முன்பும் சரி. பின்னும் சரி. உண்மையிலேயே மொஜ்தபா உயிரோடு இருக்கிறாரா என்கிற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. இருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மெஹர் மொஜ்தபா கமேனியின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த வீடியோ எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என்கிற எந்தக் குறிப்பும் இல்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/mojtaba-khamenei-video-surfaces-amid-questions-over-his-health




