சென்னை உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தஞ்சை போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு வறண்டு, கிட்டத்தட்ட ஒரு பாலைவனம்போல் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதே நேரத்தில் நம்முடைய தலைவர் முதல்-அமைச்சராக இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நம் தலைவர் இந்த நிலைமை ஏற்பட விட்டிருப்பாரா? என்றார். தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக அவர் இரட்டை அர்த்தத்தில் ஒரு கருத்தை கூறினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு தவெக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 6 பிரிவுகளில் வழக்கு இதுதொடர்பாக, உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் த.வெ.க. மகளிரணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, உதயநிதிக்கு எதிராக 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் குவிப்பு இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதற்காக தஞ்சையில் இருந்து போலீஸ் குழு இன்று காலையில் சென்னை வந்தது. சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு வந்த அவர்கள், தஞ்சையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்ய வந்திருப்பதாக கூறினர். இதுபற்றி உதயநிதியன் குடும்பத்தினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க காலஅவகாசம் வேண்டும் என அவர்கள் தரப்பில் போலீசிடம் கூறப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் கைது இதுபற்றி தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். நேரம் செல்லச்செல்ல திமுக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தொண்டர்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். கூட்டம் அதிகரித்த நிலையில், தொண்டர்களை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பின்னர் உதயநிதியை போலீசார் கைது செய்து விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் உதயநிதியின் வீட்டின் முன்பு பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது. கைது நடவடிக்கைக்கு எதிராக தொண்டர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். த.வெ.க. புகார் இதற்கிடையே தஞ்சையில் அவதூறாக பேசினார் என உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பழ. செல்வ குமார் தேசிய மகளிர் ஆணைய தலைவருக்கு புகார் மனு அனுப்பினார். அதில், உதயநிதியின் பேச்சு, காணொளியை அடிப்படையாக கொண்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. உதயநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்ப்பாட்டம் இதேபோன்று, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் த.வெ.க. மகளிர் அணி நிர்வாகிகள் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-against-udayanidhi-in-6-sections




