சென்னை, அரசு கலைக் கல்லூரிகளில் 6 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்பிற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். வரவேற்பிற்குரியது இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிதாக 6 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக நியமிக்கப்பட உள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. அந்த நியமனங்களை மாணவர்கள் நலன் கருதி விரைவாக செய்திட வேண்டும். அரசு கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூபாய் 30 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 35 ஆயிரமாகவும், பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் பகுதி நேர விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூபாய் 25 ஆயிரத்திலிருந்து ரூபாய் 30 ஆயிரமாகவும் உயர்த்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளதும் வரவேற்பிற்குரியது. 12 மாதங்களுக்கும் ஊதியம் இவ்வூதிய உயர்வை மேலும் அதிகரித்து வழங்க வேண்டும். வெறும் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதிய உயர்வு என்பது இன்றைய வாழ்க்கை நிலைமைகளில் போதுமானதாக இருக்காது. அடுத்து இந்த ஊதிய உயர்வு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ மற்றும் பகுதிநேர விரிவுரையாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். பகுதிநேர விரிவுரையாளர்களுக்கும் பல்வேறு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களுக்கும் ஆண்டுக்கு 7 முதல் 8 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே 12 மாதங்களுக்கும் ஊதியத்தை வழங்கிட வேண்டும். பெண் விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறு கால விடுப்பும் வழங்கப்பட வேண்டும். 2,771 உடற்கல்வி ஆசிரியர்கள் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவை தேர்தலை நடத்திட வேண்டும். உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உத்தரவாத திட்டத்தின்படி ரூபாய் 20 லட்சம் வரை பிணையற்ற கல்வி கடன் நடப்பாண்டு முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்பிற்குரியது. எந்த விதமான தடைகளும் இல்லாமல், வட்டியில்லாத கடனாக இதை வழங்கிட வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு கல்வி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருப்பதும், 2,771 உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பும் வரவேற்பிற்குரியன. அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்பிற்குரியது. தேசிய ஆசிரியர் கல்விப் பேரவை இதனால் சுமார் 3 லட்சத்து 28 ஆயிரத்து 701 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். 15 முதல் 20 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவமிக்க ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு இதனால் உறுதி செய்யப்படும். கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ல் உரிய திருத்தம் மேற்கொள்ளவும், தேசிய ஆசிரியர் கல்விப் பேரவை மூலம் சுற்றறிக்கை வெளியிடவும் மத்திய அரசை இத்தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. இத்தீர்மானத்தை நடைமுறை படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/appointment-of-6000-assistant-professors-in-government-arts-colleges-cpi-welcomes-the-tamil-nadu-governments-move




