`டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்று, தனது ஒவ்வொரு படைப்பிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிவரும் கயாடு லோஹருக்கு, இந்த ஆண்டின் `Most Celebrated Star' விருதை இயக்குநர் வெங்கட் பிரபு வழங்கினார். "ரொம்ப மகிழ்ச்சியாகவும் பணிவாகவும் உணர்கிறேன். எனக்கு ஆடியன்ஸிடமிருந்து கிடைத்த அன்புதான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன். சமூக வலைதளங்களிலும், நேரிலும் என்னை அன்பாக ஆதரித்த அனைவருக்குமானது இந்த விருது. என்னை வந்து சந்தித்து, எனக்கு நம்பிக்கை கொடுத்து, பாராட்டி, என்னுடைய படங்களைப் பார்த்து, நான் நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களையும் நேசித்த அனைவருக்குமானது இது. அதனால் ஆடியன்ஸுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. அவர்கள் என்மீது உண்மையாகவே அன்பாகவும், கனிவாகவும் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் எனக்கு “மோஸ்ட் செலிப்ரேட்டடு ஸ்டார் இன் டிஜிட்டல்” என்ற விருது கிடைத்திருக்கிறது"என்று பேசினார். தொடர்ந்து பேசிய கயாடு லோஹார், தனக்கு பிடித்த ரஜினி படம் தளபதி, கமல் படம் மைக்கேல் மதன காமராஜன், விஜய் படம் GOAT, சூர்யா படம் வாரணம் ஆயிரம் என்றும் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/kayadu-lohars-favorite-films-vijays-goat-suriyas-vaaranam-aayiram




