காத்மாண்டு, நேபாளம் பெருவெள்ளத்திற்கு முன்பும், பின்பும் எப்படி இருந்தது என்பதைக் காட்டும் செயற்கைகோள் புகைப்படம் வெளியாகியுள்ளது. கண்இமைக்கும் நேரத்தில் நேபாளம் - திபெத் எல்லையில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் பெருவெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோர கட்டிடங்கள், குறுக்கே சென்ற பாலங்கள், கரையோரம் வசித்த மக்கள், நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சிக்கி கண்இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பலி எண்ணிக்கை உயர்வு ஹாலிவுட் திரைப்படத்தில் வருவதுபோன்ற இந்த பயங்கர காட்சிகள் வெளியாகி, காண்போரை அதிர்ச்சி அடையச் செய்தன. பலி எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கும் நிலையில், மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கைகோள் புகைப்படங்கள் இந்த நிலையில், நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்ட போதேகோசி நதியை கடந்த 23-ந் தேதி எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படமும், நேற்று வெள்ள பாதிப்புக்கு பிறகு எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளன. அலங்கோல காட்சிகள் பச்சை பசுமையாக காட்சியளிக்கும் மலையில், போதேகோசி நதி வெள்ளை நூல் போன்று பாய்ந்து செல்வது கண்கொள்ளா காட்சியாக தெரிவது முதல் செயற்கைகோள் படத்தில் தெரிகிறது. பெருவெள்ள பாதிப்புக்கு பிறகு வெளியான செயற்கைகோள் படத்தில், போதேகோசி நதியின் அலங்கோல காட்சிகள், பார்ப்பவர்களை கண்ணீர் வடிக்கச் செய்கிறது. Planet Labs को स्याटेलाइट तस्बिरको विश्लेषणका आधारमा गरिएको प्रारम्भिक अध्ययनबाट नेपाल-चीन रसुवागढी नाकाबाट करिब २० किलोमिटर उत्तरपूर्व नेपाल-चीन सिमानामा गएको हिम-चट्टान पहिरोका कारण ल्हेन्दे खोलामा गेग्य्रानसहितको बाढी आएको देखिएको छ। — NDRRMA (@NDRRMA_Nepal) August 26, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/nepal-before-and-after-the-massive-floods-satellite-images-released




