திருவனந்தபுரம், அரசு மருத்துவர்களின் தனியார் கிளினிக் நடத்துவது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME) சார்பில் நடத்தப்பட்ட கூட்டம் குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி முரளீதரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அரசின் தரப்பில் இருந்து அத்தகைய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது;- “தனியார் பயிற்சியை அனுமதிப்பது இந்த அரசின் கொள்கை அல்ல. அது தொடர்பான எந்தக் கோரிக்கையையும் நாங்கள் பெறவில்லை; அத்தலைப்பு குறித்து நாங்கள் விவாதிக்கவும் இல்லை. கடந்த பிப்ரவரி மாதம், முந்தைய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் கூட்டம் நடத்தப்படுவது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் (DME) தகவல் தெரிவித்திருந்தார். கேரளாவில் காங்கிரஸ் கட்சி பதவியேற்ற பிறகு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைத்தான் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்று நான் கூறினேன். பிப்ரவரியில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை செப்டம்பரில் செல்லுபடியாகாது. எனவே, அரசு மருத்துவர்கள் தனியார் கிளினிக் நடத்துவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதற்கான கோரிக்கை எதுவும் வரவில்லை. கேரளாவில் அரசு மருத்துவர்களுக்கு தனியார் மருத்துவ பயிற்சி தேவைப்படும் சூழலும் இல்லை.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/government-doctors-cannot-be-permitted-to-run-private-clinics-kerala-health-minister-asserts



