தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தெலங்கானா சைபர் செக்யூரிட்டி பியூரோ "சுரக்ஷா கா திரங்கா" சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்வில் நடிகர் நாகார்ஜுனா கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், `` நான் ஒரு பிரபலமாக இருப்பதால் எப்போதும் கவனமாக இருக்கிறேன். 15 நாட்களுக்கு ஒருமுறை பாஸ்வர்டை மாற்றுகிறேன். அதேபோல, எனது வீட்டின் வைஃபை (WiFi) கடவுச்சொல்லை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிடுவேன். நான் போன் வைத்திருக்கிறேன், ஆனால் அதை யார் ஹேக் செய்து விடுவார்களோ என்ற பயம் எப்போதும் எனக்கு இருக்கும். மேலும் எனது போனில் புகைப்படங்களைச் சேமித்து வைப்பதில்லை. Nagarjuna - நாகர்ஜுனா நான் உண்மையில் என் போனில் புகைப்படங்கள், செல்ஃபி கூட எடுப்பதில்லை. ஆனால், அப்பாவி முதியவர்களுக்கு சைபர் மோசடியாளர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது எனக்கு தெரியும். சுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, வங்கி அதிகாரி போல நடித்த ஒருவர், பங்குகளிலும் ஈக்விட்டிகளிலும் முதலீடு செய்யச் சொல்லி நம்பவைக்க முயன்றார். எனது உறவினர் ஒருவர் வீட்டிலேயே சுமார் ஆறு முதல் ஏழு மணி நேரம் 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்ட அனுபவமும் இருக்கிறது. ஒரு போலீஸ் அதிகாரி போல் நடித்த நபர், ஈரான் நாட்டிற்கு ஒரு பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் போதைப்பொருட்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். நல்வாய்ப்பாக, உறவினர் சைபர் கிரைம் துறையைத் தொடர்பு கொண்டு அந்த மோசடியில் இருந்து தப்பித்தார்." என்றார். தடை செய்யப்பட்ட பான் மசாலாவிற்கு விளம்பரம்: நடிகர் ஷாருக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/tollywood/actor-nagarjuna-addressed-an-event-organized-by-the-cyber-crime-police



