சென்னை, ‘ஹேங்க் ஓவா’ எனப் பெயரிட்ட இப்படத்தின் புதிய இசை வீடியோ நாளை (ஜூலை 6) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநராக பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தார். மேலும், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) என்ற புதிய முயற்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ‘கூலி’ திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. கேங்ஸ்டராக லோகேஷ். முக்கிய வேடத்தில் வாமிகா கபி சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘டிசி’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி ‘சந்திரா’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், சஞ்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அதில் வாமிகா கபி மற்றும் சஞ்சனா பாலியல் தொழிலாளிகளாகவும், லோகேஷ் கனகராஜ் கேங்ஸ்டராகவும் நடித்திருப்பது தெரியவந்தது. பழிவாங்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளன. இதனால், படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்டேட் கொடுத்த அனிருத் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ‘டிசி’ திரைப்படம் வருகிற ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இசையமைப்பாளர் அனிருத் ‘டிசி’ படத்தின் அப்டேட் ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில் டிசி படத்திலிருந்து புதிய பாடல் ஒன்று விரைவில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், ‘ஹேங்க் ஓவா’ எனப் பெயரிட்ட இப்படத்தின் புதிய இசை வீடியோவை நாளை (ஜூலை 6) மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியான‘ராகா ஆப் ரிவெஞ்’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அடுத்த பாடல் நாளை வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/lokesh-kanagarajs-dc-movie-song-update




