சென்னை, முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை தவெக-வில் இணைத்துக்கொண்டனர். இணைப்பு விழா தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்துக்களுடன், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முக்கிய அரசியல் பிரமுகர்களான: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மாலா ஆகியோர் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக்கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வருகை மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகிய முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்னை பனையூர் அலுவலகத்தில் திரண்டு தவெக-வில் இணைந்தனர். இவர்களை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சி இந்நிகழ்வில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்வி. கருப்பையா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், முன்னாள் எம்.பி. பாலகங்கா, முன்னாள் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தன், வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வேல்முருகன், கழக நிர்வாகி சினோரா பி.எஸ்.அசோக், கழக செய்தி தொடர்பாளர் இராவுத்தர் இம்பிராகிம், கமலக்கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thousands-join-tamil-nadu-vetri-kazhagam




