காஞ்சிபுரத்தில் விசிக மண்டல செயற்குழு கூட்டம் நேற்று (ஜூலை. 10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருமாவளவன் பாஜக குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. செயற்குழு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், " தனிப்பட்ட முறையில் பாஜக மீது எந்த வெறுப்பும் கிடையாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சான்றுபடி இன்று எனக்கு பிறந்தநாள். ஆகையால் காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இருவரும் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் பாஜககாரர்கள்தான். அஷ்வினி வைஷ்ணவ் இல்லத் திருமணத்திற்கு வீடு தேடி வந்து பத்திரிகை வைத்தார். நானும் பங்கேற்றேன். பாஜகவின் கொள்கையை எதிர்ப்பது என்பது வேறு. தனிநபர் உறவு என்பது வேறு" என்று பேசியிருக்கிறார். 'ஜெயித்தவர்கள்,தோற்றவர்கள் சந்தித்துக் கொண்டதை யாரும் விவாதிக்கவில்லை, ஆனால்.'- திருமா கூறியதென்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/thirumavalavan-about-bjp-and-amit-shah-and-ashwini-vaishnav




