தமிழக செய்திகள், சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் பகுதியில் காய்ச்சலுக்கு மருந்து கொடுத்தபோது மூச்சு திணறி குழந்தை உயிரிழந்தது. குழந்தைக்கு காய்ச்சல் சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், குட்டச்சிவளவு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி சித்ரா. இந்த தம்பதிக்கு கடந்த 42 நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. மருந்து கொடுத்தபோது மூச்சு திணறல் நேற்று காலை தாய் சித்ரா குழந்தைக்கு காய்ச்சல் மருந்து கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே பெற்றோர் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை வரும் வழியிலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/child-dies-of-suffocation-while-being-given-fever-medicine




