கவுகாத்தி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தினார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. 2வது ஒருநாள் போட்டி இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் இரட்டை சதம் இதனை தொடர்ந்து 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கி விளையாடி வருகிறது. இதில் சிறப்பாக ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசியுள்ளார். அவர் 117 பந்துகளில் 200 ரன்கள் குவித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில் விளாசும் 2வது இரட்டை சதம் இதுவாகும். தற்போதைய நிலவரப்படி இந்தியா 41 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது. கில் 214 ரன்களுடனும், கெய்குவாட் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றிபெற 9 ஓவர்களில் இன்னும் 21 ரன்கள் எடுக்க வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/second-odi-subhman-gill-smashes-double-century




