வேலூர், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சிவராமன் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கேத்ரின் சரண்யா. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் சிப்காட் நிறுவன செயல் இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டார். அதன்படி வேலூர் மாநகராட்சி கமிஷனராக இருந்த சுல்தானா இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் கேத்ரின் சரண்யா வேலூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உயர்ந்த பதவிகளான போலீஸ் சூப்பிரண்டாக கணவரும், மாநகராட்சி கமிஷனராக மனைவியும் இருப்பது மாவட்ட மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சிவராமன் கடந்த பிப்ரவரி மாதமும், கமிஷனர் சுல்தானா கடந்த ஜூலை மாதமும் பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/ips-ias-couple-serve-as-superintendent-of-police-and-corporation-commissioner-in-vellore




