திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 78 ஆயிரத்து 956 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 14 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 46 லட்சம் ஆகும். மேலும் 4 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 211 பக்தர்கள் மருத்துவச் சிகிச்சை மற்றும் மருத்துவ உதவி பெற்றனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்மெண்ட்டில் பக்தர்கள் நிரம்பி சிலாத்தோரணம் பகுதியில் உள்ள காத்திருப்பு அறைகள் மற்றும் வெளிப் புற வரிசைகளில் காத்திருந்தனர். 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்துக்காக பக்தர்கள் 18 முதல் 20 மணி நேரம் வரை காத்திருந்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/devotees-wait-20-hours-for-free-darshan-at-the-tirupati-temple




