தூத்துக்குடி, ராக்கெட் ஏவுதளம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (இஸ்ரோ) சொந்தமான ராக்கெட் ஏவுதளம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு செயற்கைக்கோள் கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இதையடுத்து நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம், தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது. பூமத்திய ரேகைக்கு மிக அருகில் குலசேகரன்பட்டினம் இருப் பதால், இங்கிருந்து ராக்கெட்டுகளை குறைந்த எரிபொருளில் விண்ணில் செலுத்தி புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடி யும். முதல்கட்டமாக இங்கிருந்து சிறியவகை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கட்டும் பணிகள் மும்முரம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணி களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இஸ்ரோ அலுவலகம், ராக்கெட் ஏவு தள கட்டிடம், ராக்கெட் பராமரிப்பு பணிமனை போன்றவை கட்டப்பட்டு உள்ளன. மேலும் ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர் கள் தரையிறங்கி புறப்படும் வகையில் பிரமாண்ட ஹெலிபேடு தளமும் அமைக்கப்பட்டு உள்ளன. கடற்கரையில் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் 5 அடுக்குகளாக வனத்துறை சார்பில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது குலசகேரன்பட்டினம் இஸ்ரோ மைய வளாகம் வழி யாக கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்கின்றன. ராக்கெட் ஏவுதள பணிகள் முடிந்ததும், அந்த வழியாக வாகனங்கள் செல்லாதவாறு மாற்றுப்பாதையில் புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு கருமேனி ஆற்றின் குறுக்கே அமராபுரம், காரங்காடு ஆகிய இடங்களில் புதிய உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ராக்கெட் ஏவுதளம் செயல்படும் வகையில் அனைத்து பணிகளையும் துரிதமாக நிறைவேற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் மயம் இந்த நிலையில், குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ அமைத்து வரும் ராக்கெட் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ரூ.986 கோடியில் அமையும் இந்த ஏவுதளத்தை முழுமையாக நிர்வகிக்கவும், ராக்கெட்டுகளை ஏவுவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/kulasekarapattinam-rocket-launch-pad-to-be-privatized




