மோகி, ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி தொடரில், இந்திய ஆண்கள் அணி தனது முதல் ஆட்டத்திலேயே இந்தோனேசியாவை 14-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அபார வெற்றி ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி தொடர் சீனாவின் மோகி நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்தியா, நேற்று தனது தொடக்க ஆட்டத்தில் இந்தோனேசியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இந்தோனேசியாவுக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்காமல் கோல் மழை பொழிந்தது. முடிவில் இந்தியா 14-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் பிரதீப் சிங் 5 கோல்களும், கேப்டன் அன்மோல் எக்கா 4 கோல்களும், அஜீத் யாதவ் 3 கோல்களும் அடித்து அசத்தினர். இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பானை எதிர்கொள்கிறது. பெண்கள் அணியும் வெற்றி பெண்கள் பிரிவிலும் நடப்பு சாம்பியனான இந்திய அணி வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ளது. ‘எலைட்’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, தனது தொடக்க ஆட்டத்தில் தென்கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்திய அணியில் சானிகா, பூர்ணிமா யாதவ், பூஜா மற்றும் மது சிதார் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய பெண்கள் அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் இன்று மலேசியாவுடன் மோதி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/hockey/junior-asia-cup-hockey-14-goals-india-demolishes-indonesia




