கொல்கத்தா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 முன்னாள் எம்.பி.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. சுவேந்து அதிகாரி முதல்-மந்திரியானார். இந்த சூழலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்றம் என இரண்டையும் சேர்ந்த உறுப்பினர்கள் வெளியேறி வருகின்றனர். முன்னாள் எம்.பி.க்கள் அவர்களில் பலர் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். இதன்படி, பா.ஜ.க. மாநில தலைவர் சமிக் பட்டாச்சார்யா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 முன்னாள் எம்.பி.க்களான சுஷ்மிதா தேவ், பிரகாஷ் சிக் பராய்க் மற்றும் சுகேந்து சேகர் ராய் ஆகியோர் சால்ட் லேக் பகுதியில் உள்ள பா.ஜ.க.வின் கட்சி அலுவலகத்தில் இன்று இணைந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/3-former-trinamool-congress-mps-join-bjp




