திருப்பூர், குமரலிங்கம் சின்னகருப்பணசாமி கோவில் வீதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (29), கூலித்தொழிலாளி. இவர் குமரலிங்கம் பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்றுகொண்டிருந்தார். பீடி கேட்டு தகராறு அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன், சபரி, குணாப் ஆகிய 3 பேரும் சதீஷ்குமாரிடம் பீடி கேட்டுள்ளனர். அதற்கு அவர், தன்னிடம் பீடி இல்லை எனக் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பீர் பாட்டிலால் தாக்குதல் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து சதீஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அங்கு கிடந்த பீர் பாட்டிலால் அவரது தலையில் தாக்கியதாகவும் தெரிகிறது. இதில் சதீஷ்குமார் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை சம்பவத்தையடுத்து கர்ணன், சபரி, குணாப் ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். காயமடைந்த சதீஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குமரலிங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 3 பேருக்கு போலீசார் வலை இதுகுறித்த புகாரின் பேரில் குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கர்ணன், சபரி, குணாப் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/altercation-over-a-beedi-daily-wage-worker-attacked-with-a-beer-bottle




