சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் 30 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை காரில் வந்த கும்பல் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாமீனில் வந்த ரவுடி சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஊர்க்காவலன் (வயது 31). பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது 3 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஊர்க்காவலனை வழக்கு ஒன்றில் கைது செய்ய கடந்த மார்ச் மாதம் திருப்பாச்சேத்தி போலீசார் தேடிச்சென்றனர். அப்போது அவர் போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். இதையடுத்து அவரை துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஊர்க்காவலன், சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். வீடு புகுந்து வெட்டிக்கொலை இந்த நிலையில் நேற்று காலை ஊர்க்காவலன் தனது வீட்டையொட்டி உள்ள ஒரு கடையில் அமர்ந்து இருந்தார். அப்போது ஒரு காரில் வந்து இறங்கிய 5 பேர் திடீரென ஊர்க்காவலனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து காயங்களுடன் ஊர்க்காவலன் தப்பி தனது வீட்டுக்குள் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் பின்தொடர்ந்து சென்று வீட்டுக்குள் புகுந்து ஊர்க்காவலனை கொடூரமாக வெட்டிக்கொன்றது. மேலும் ஊர்க்காவலனின் முகத்தை முழுமையாக சிதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஊர்க்காவலனை வெட்டிக்கொன்ற கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சிவகங்கையில் அம்பேத்கர் சிலை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/sivagangai-famous-rowdy-hacked-to-death-after-breaking-into-house-gang-in-car-commits-brutal-act




