சென்னை, பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். திடீர் போராட்டம் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 45 விவசாயிகள் இன்று காலை தலைமைச் செயலகம் முன்பு கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், அரசு உடனடியாக பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகள் கைது சட்டப்பேரவைக்குள் விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதம் நடைபெற்று வந்த நிலையில், பேரவைக்கு வெளியே விவசாயிகள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் தலைமைச் செயலகம் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-protesting-in-front-of-the-secretariat-arrested




