மதுரை, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்தான் 2029 மக்களவைத் தேர்தலில் அடுத்த பிரதமர் என்று சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் வெளியாகி விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது. இதனிடையே, அடுத்த பிரதமர் யார்? என்று தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அடுத்த இடத்தில் முதல்-அமைச்சர் விஜய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்., மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஜோசியக்காரர்கள் பேசுவதை சீரியஸ் ஆக எடுக்கத் தேவையில்லை. அது ஜோசியக்காரர்களின் ஆருடம். கட்சியின் நிலைப்பாடு அது இல்லை, அது தனிப்பட்ட நபர்களின் கருத்து என்று தவெக பொருளாளர் தெளிவுபடுத்திவிட்டார். தமிழக முதல்-அமைச்சராக விஜய் இருக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி அரசு என்பது எங்கள் எண்ணம். விஜய் அவர்கள் முதல்-அமைச்சராகும் முதல் இலக்கு நிறைவேறிவிட்டது, ராகுல் காந்தியை பிரதமராக்க சேர்ந்து பணியாற்றுவோம் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/ஜோசியக்காரர்கள்-பேசுவதை-சீரியஸ்-ஆக-எடுக்க-தேவையில்லை-மாணிக்கம்-தாகூர்no-need-to-take-what-fortune-tellers-say-seriously-manickam-thakur



