திருவனந்தபுரம் சபரிமலையில் நிறைப் புத்தரிசி பூஜைக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடை திறக்கப்படுகிறது. இந்தநிலையில் பம்பை ஆற்றில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளதால் தரிசனத்துக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறைப்புத்தரிசி பூஜை நாளை (திங்கட் கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவில் நடை இன்று (ஞாயிற்றுக்கி ழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.கேரளத்தில் தற்போது கனமழை பெய்து வரும் சூழலில் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பம்பையில் இருந்து சன்னி தானத்திற்கு பக்தர்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே, பக்தர்கள் தரிசனத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என திருவிதாங் கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேவஸ்தனம் அறிவுரை இதுகுறித்து தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆற்றை கடக்க முடி யாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இன்றும், நாளையும் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் தங்களது சபரிமலை பய ணத்தை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 16-ந் தேதி திறக்கப்படும். 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கோவில் நடை திறக்கப் படும். இதற்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/devotees-urged-to-avoid-sabarimala-pilgrimage-travancore-devaswom-board-makes-appeal




