திருவாரூர், திருவாரூர் மாவட்டம், வாளவாய்க்கால் பகுதியில் மதுபாட்டில்கள் கடத்தல் தொடர்பாக போலீஸ் ஏட்டு உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தல் திருவாரூர் மாவட்டம், வாளவாய்க்கால் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையில், காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான 300-க்கும் மேற்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸ் ஏட்டு உள்பட 3 பேர் கைது இதுதொடர்பாக காரைக்கால் வாஞ்சியூர் பகுதியிலிருந்து மது கடத்தி வந்த மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த குமார் (வயது 35), அருண்குமார்(39) மற்றும் பரவாக்கோட்டை போலீஸ் நிலைய ஏட்டு கார்த்திகேயன்(40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/liquor-smuggling-3-people-arrested-including-police-officer-car-seized




