துபாய், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான முகமது நவாஸ், ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறிய விவகாரத்தில் ஒரு மாத தடையுடன் தப்பியுள்ளார். ஊக்கமருந்து இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின்போது, பாகிஸ்தான் அணி இலங்கையில் தனது போட்டிகளை விளையாடியது. அந்த தொடரில் பங்கேற்ற முகமது நவாஸுக்கு நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில், தடை செய்யப்பட்ட கார்பாக்ஸி-டிஹெச்சி (Carboxy-THC) என்ற பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. 32 வயதான முகமது நவாஸ், கடந்த பிப்ரவரி 7-ம் தேதி கொழும்பில் நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது இந்த பொருளைப் பயன்படுத்தியதாகவும், அது போட்டித் திறனை மேம்படுத்தும் நோக்கத்திற்காக அல்ல என்றும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், தனது தவறை அவர் ஒப்புக்கொண்டார். Pakistan spin-bowling all-rounder has been sanctioned under the ICC Anti-Doping Code. — ICC (@ICC) July 17, 2026 தடை ரத்து இதனைத் தொடர்ந்து ஐசிசி கடந்த மே மாதத்தில் இருந்து அவருக்கு 3 மாதக்காலம் தடைவிதித்தது. இதில் இரண்டரை மாதக் காலம் புனர்வாழ்வு (rehabilitation) திட்டத்தில் சிகிச்சை மேற்கொண்டு சிறப்பாக அந்த காலக்கட்டத்தை முடித்தால், தண்டனை ஒரு மாதக்காலமாக குறைக்கப்படும் என்றது ஐசிசி. ஐசிசி-யின் நிபந்தனையின்படி நேற்று முன்தினத்துடன், வெற்றிகரமாக புனர்வாழ்வு காலத்தை முடித்தார். இதனைத் தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், புனர்வாழ்வு சிகிச்சையையும் வெற்றிகரமகா முடித்ததால், ஒரு மாதக்காலம் தடை தேவையில்லை என்று ஐசிசி அவர் மீதான தடையை ரத்து செய்தது. சாதனை செல்லாது இதற்கிடையில், ஐசிசி ஊக்கமருந்து தடுப்பு விதிகளின்படி, பிப்ரவரி 7-ம் தேதி நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முகமது நவாஸ் பதிவு செய்த 2 விக்கெட்டுகள் மற்றும் 6 ரன்கள் உட்பட, மே 1, 2026 வரை அவர் பதிவு செய்த அனைத்து புள்ளிவிவரங்கள் மற்றும் சாதனைகளும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/pakistan-spin-bowling-all-rounder-has-been-sanctioned-under-the-icc-anti-doping-code




