2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72- வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படத்திற்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வருடத்தில் நிறைய நல்ல படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் 'ராயன்' படத்திற்கு தேசிய விருதா? என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ராயன் இந்நிலையில் நேற்று (ஜூலை.26) தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தனுஷ் 'ராயன்' படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், " 'ராயன்' படத்துக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. அந்த வருடத்தில் ராயனை விட நல்ல படங்கள் வெளியாகியிருந்தது. அந்தப் படங்களின் ரசிகர்கள் ஆதங்கத்தில் இருக்கிறார்கள், அதை மதிக்கிறேன். அன்று கடும் கண்டனம், இன்று மெளனம்! - லாக்கப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது CM சார்? 'அது ஒரு கனா காலம்' நடித்த போது சின்னப் பையனாக இருந்தேன். தேசிய விருது கட்டாயம் கிடைக்கும் என்றார்கள். நானும் ஆசையோடு இருந்தேன். ஆனால், விருது கிடைக்கவில்லை. ‘புதுப்பேட்டை’க்கு விருது கிடைக்கும் என்று எல்லாரும் சொன்னார்கள். அப்போதும் கிடைக்கவில்லை. 'மயக்கம் என்ன', '3', 'மரியான்', 'ராஞ்சனா', 'வடசென்னை', ‘கர்ணன்' என பல படங்களுக்கும் விருது கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் யாரும் பேசவில்லை. தனுஷ் இன்றைக்கு 90% பேர் விமர்சிக்கின்றனர். அன்றைக்கு 10% பேர் கூட எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தட்டி விடாதீர்கள்.தட்டிக் கொடுங்கள். அஜித் சார் சொன்ன மாதிரி தான் 'நீயா தோத்துட்டன்னு ஒத்துக்குற வரைக்கும் உன்னைய யாராலையும் தோற்கடிக்க முடியாது" என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் தனுஷ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/kollywood/dhanush-reacted-raayan-national-award-criticism




