மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. ஆண்டனி வர்கீஸ் அதில் கலந்துகொண்டு பேசிய மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், `` சென்னைக்கு பலமுறை வந்தாலும், நான் நடித்தப் படத்தின் விளம்பரத்துக்காக வருவது இதுவே முதல் முறை. எனக்கு தமிழ் மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இயக்குநர் எனக்கு நண்பர். படத்தின் என் கேரக்டர் பற்றி நான் சொல்லக் கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறேன். இந்தப் படத்தின் புரோடியூசர், பேமஸான நடிகர் துல்கர் சல்மான். மிகவும் நல்ல நண்பர் தாண்டி நல்ல மனிதர். படங்களில் காட்டுவதுபோல நான் முரடன் அல்ல. ரியல் லைப்ல நான் அப்பாவி. இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஆகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் மரியாதைக்குறிய முதல்வர் விஜய் சாரோட பெரிய பேன். மாஸ்டர் படத்தில் அர்ஜூன் தாஸ் நடித்த கதாப்பாத்திரம் முதலில் எனக்குதான் கிடைத்தது. ஆனால் என்னால் அதை அப்போது நடிக்க முடியவில்லை. அதற்கான இப்போதும் வருத்தப்படுகிறேன். ரஜினி, அஜித், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது." என மலையாளம் கலந்த தமிழில் பேசினார். I’m Game: `அழகு சில நேரங்களில் அவரது திறமைக்கு ஒரு சிறிய தடை' - கயாடு லோஹர் குறித்து துல்கர் சல்மான் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/kollywood/the-promotional-event-for-the-movie-i-am-game-was-held-in-chennai-yesterday-2



