மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரூ.60 கோடி சொத்து மோசடியில் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் கைது செய்யப்பட்டார். மதுரை தல்லாகுளம் அழகர்கோவில் சாலையில் உள்ள அசோகாவிலாஸ் பங் களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம் சுமார் 2 ஏக்கர் நிலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமானது. இதன் மதிப்பு சுமார் 60 கோடி ரூபாய். ஆனால் அந்த சொத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து பத்திரப்பதிவு செய்ததாக மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு அதன்பேரில் ராமாயி ஆயியார், செந்தமிழ்செல்வி. பிரேமா, ராஜ்குமார், முத்து ராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் வி.ஏ.ஓ. அரசன், முன்னாள் தாசில்தார் அன்பழகன், இளையராஜா, அனிஷ். அனந்தராமன், கவிதா, பிரகாஷ், காளிக்குமார் மற்றும் பிரசாந்த் சந்தானகருப்பன் ஆகிய 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி புதுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த காளிக்குமார், சப்-கலெக்டர் அன்பழகன், வருவாய் அதிகாரி அரசன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து மதுரை நகர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில் ராமாயி ஆயியார் தரப்பினர் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் அனந்தராமன் மூலம் உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா, திருவள்ளூர் மாவட்டம் அனிஷ் ஆகியோருக்கு பொது அதிகார ஆவணம் பதிவு செய்துள்ளனர். கைது அது தொடர்பாக போலீசார் விசாரித்த போது அனந்தராமன் நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் என்றும், அவர் தற்போது ஓய்வு பெற்றதும் தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று இரவு அனந்தராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-property-fraud-retired-sub-registrar-arrested




