தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு விசிக சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ``நான் 250 கி.மீ தூரத்திலிருந்து வருகிறேன். கார் வசதி இல்லை. வாடகை வாகனத்தையே நம்பவேண்டிய சூழல் இருக்கிறது. எனவே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காரும், ஒரு உதவியாளரும் வழங்க வேண்டும்." எனக் கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய், `` அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வசதி செய்து கொடுக்கப்படும். காரைப் பராமரிக்க மாதம் ரூ.75,000 மற்றும் அலுவலகப் பணிகளுக்கு உதவியாளரை நியமிக்க ரூ.25,000 வழங்கப்படும்" என்றும் அறிவித்தார். முதல்வர் விஜய் முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, த.வெ.க எம்.எல்.ஏ-க்கள் சபரி ஐங்கரன், `` என்னிடம் கார் இல்லாததால் ஆட்டோவில் வருகிறேன். முதல்வரின் இந்த உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வருக்கு நன்றி." எனத் தெரிவித்திருந்தார். எம்.எல்.ஏ சண்முகன், ``இன்னோவா காராகக் கொடுத்தால் நன்றாக இருக்கும் எனக்கு பின்னால் இருக்கும் சில பேசுகிறார்கள்" என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கார் வசதிகேட்ட எம்.எல்.ஏ-க்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்கள் தற்போது வைரலாகி வருகிறது. சட்டப்பேரவையில் கார் இல்லை என்று கூறிய சபரி ஐங்கரன், தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் 'டாடா டிகார்' கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரிடம் ரூ.30 லட்சம் வங்கி இருப்பு உள்ளதும் தெரியவந்துள்ளது. இதேபோல், கார் வசதி கோரிய விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி, தன்னிடம் 'டொயோட்டா எட்டியோஸ்' கார் இருப்பதாகத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். இதுதவிர, தனது மனைவியிடம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகளும், தன்னிடம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இன்னோவா கார் குறித்து பேசிய ய்தவெக எம்.எல்.ஏ சண்முகனோ, ஏற்கெனவே இரண்டு பென்ஸ் கார்கள் உள்ளிட்ட மொத்தம் நான்கு கார்களை வைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. எம்.எல்.ஏ ஜோதிமணி ஏற்கெனவே கார் உள்ளிட்ட சொகுசு வசதிகளைக் கொண்ட எம்.எல்.ஏ-க்கள், சட்டப்பேரவையில் தங்களுக்கு கார் வேண்டும் என்று கூறியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் உண்மையை மறைத்துப் பொதுச் சொத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாகப் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே சொத்துக்கள் இருந்தும், கார் இல்லை என்று கூறி, அரசு சலுகைகளைப் பெறுவது தார்மீக அடிப்படையில் சரியா என்ற விவாதமும் தற்போது மக்களிடையே எழுந்துள்ளது. மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/mlas-asking-for-cars-from-assembly-despite-owning-cars-themselves-has-sparked-a-debate



