கோவை, கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் நடமாடி வருகின்றன. இவை உணவு, தண்ணீரை தேடி அவ்வப் போது மலையடிவார பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின் றன. இதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும், காட்டுயானைகள் வருகை குறையவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சின்னதடாகம் அடுத்த நஞ்சுண்டாபுரம் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி நடராஜ் தோட்டத்தில் வேட்டை யன் என்று அழைக்கப்படும் காட்டுயானை புகுந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அந்த காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காட்டுயானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் குறிப்பாக தடாகம் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-movement-of-a-wild-elephant-in-a-residential-area-warning-issued-to-the-public




