திருநெல்வேலி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் கோட்டத்தில் நாங்குநேரி, விஜயாபதி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் மின்தடை செய்யப்பபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளியூர் கோட்டம் வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாங்குநேரி (AMRL) மற்றும் விஜயாபதி துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (18.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பினவருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம். நாங்குநேரி, ராஜக்கள்மங்களம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழ் ஊர், பெருமளஞ்சி மேல் ஊர், ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-21




