லக்னோ, திரிபுராவில் இருந்து டெல்லி புறப்பட்ட இண்டிக்கோ விமானத்தில் புகை எச்சரிக்கை வந்ததால் லக்னோவில் தரையிறக்கப்பட்டது. திரிபுரா தலைநகர் அகர்தலாவில் இருந்து டெல்லிக்கு இன்று மாலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 103 பேர் பயணம் மேற்கொண்டனர். விமானம் லக்னோவில் தரையிறக்கம் இந்நிலையில், விமானம் உத்தரபிரதேச வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் புகை வருவதாக எச்சரிக்கை சமிக்ஞை வந்தது. இதையடுத்து, விமானம் உடனடியாக உத்தரபிரதேசத்தின் லக்னோ விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விமானத்தில் சோதனை செய்யப்பட்டது. விமானத்தில் தீ விபத்து, புகை எதுவும் வரவில்லை. மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக புகை வருவதற்கான எச்சரிக்கை சமிக்ஞை வந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/tripuravilirundu-delli-purappatta-vimanam-lucknowvil-taraiyirakkam




