அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஹைலாகண்டி மாவட்டத்தில் 15 வயதேயான மைனர் பெண்ணை மர்ம நபர்கள் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரது முகம் மற்றும் தலையைச் சிதைத்து அடையாளம் காணமுடியாதபடி செய்து காட்டுக்குள் தூக்கிப்போட்டுள்ளனர். இரவு சுமார் 11 மணியளவில் கட்லிச்சேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலோய்சோரா பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அப்பெண் தனது குடும்பத்தினருடன் விருந்து ஒன்றில் கலந்துகொள்வதற்காக உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார். இருப்பினும், உறவினர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் திரும்பி வரும்போது அவரை நடுவழியில் மறித்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளனர். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தபோது கடுமையாகச் கொடுமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர். மைனர் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியைச் செருகி சித்ரவதை செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மைனர் பெண்ணின் உடலை மீட்டு போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். குற்றவாளியை உடனே கைது செய்யவேண்டும் என்று கோரி மைனர் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்காக ஐந்து பேர் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் அமிதாப் சின்ஹா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் மருத்துவ ரீதியாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கொலை செய்யப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் எந்தவொரு முடிவிற்கும் வருவதற்கு முன்பு நாங்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். நாங்கள் இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து வருகிறோம். மேலும் தற்போது நான்கு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று சின்ஹா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுதலை; பட்டாசு வெடித்து வரவேற்ற பாஜக-வினர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/crime/minor-girl-raped-and-murdered-gang-disfigured-her-face-and-dumped-body




